பிடித்து போன ஒன்று ......


"மறதி ...,
பிடித்து போன ஒன்று ......!!!

காவி சாயங்களை
எத்தனை முறை
வெளுத்தாலும் ...
மறந்து போனதால்
மறதி பிடித்து போனது .....,,,!!!!

கார்க்கில்
சிலருக்கு ..மீளாதுயரம்
சிலருக்கு ..நாட்டுப்பற்று
சிலருக்கு ...வரவு ..
சிலருக்கு ...வாழ்க்கை
மறக்க நினைப்பதால்
மறதி பிடித்து போனது .....,!!!

மனம் மகிழுங்கள்நமது மனது எப்படி இருக்கிறதோ அப்படித்தான் அது உலகத்தை உணர்கிறது. மனது உலகத்தை எப்படி உணர்கிறதோ அப்படித்தான் உலகம் நம்மைப் பிரதிபலிக்கிறது.

குழப்புகிறதோ?
ரொம்ப சிம்பிள்.

நீங்கள் உற்சாகமாய், “குட் மூடில்“ இருக்கிறீர்கள் என்றால் நீங்களும் மற்றவர்களிடம் அன்பாய், இனிமையாய், நகைச் சுவையாய்ப் பேசுவீர்கள்.. பதிலுக்கு அவர்களும் உங்களிடம் அப்படியே பிரதிபலிப்பர். நீங்கள் சிரித்து நண்பரின் முதுகைத் தட்டினால் அவர் கத்தி எடுத்துக் கொண்டு உங்களைக் குத்த வரப்போவதில்லை. பதிலுக்கு அவரும் சிரித்தாக வேண்டும். உலகமே அன்று உங்களுக்கு மகிழ்ச்சியாய், இனிதாய்த் தோன்றும்.

யாரிடம்.., புகார் கொடுக்க உன்னைப் பற்றி?

கடமை ..,
நாட்டு உடைமை
ஆகாத வார்த்தை ...


காலம் தவறி
வரும் அரசு பேருந்து,,
தவறாமல் மீதி தராத
நடத்துனர்...,


அரசு மருத்துவமனையில்..
கடைசியாய் நுழையும்
பொதுநல மருத்துவர் ..,
வரிசைக்கும் காசு,
வாங்கும் கம்பவுண்டர்....


ஒவ்வொரு முறையும்
வாக்கு தரும் வேட்பாளர் ..
வாக்கு தவறினாலும்
அவருக்கே வாக்கு
போடும் வாக்களர்கள்...!!!!


சீமானுக்கும் மற்ற தலைவர்களுக்கும் இருக்கிற வித்தியாசம்.‘சைலன்ஸ்’ என்ற வார்த்தையைக்கூட இங்கு சத்தமாகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது -நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான். கோஷத்திற்கும் முழக்கத்திற்கும் இருக்கிற வித்தியாசம்தான் சீமானுக்கும் மற்ற தலைவர்களுக்கும் இருக்கிற வித்தியாசம். ஈழ விடுதலைக்கான குரல் மட்டுமல்ல, தமிழினத்திற்கு எந்த ரூபத்திலாவது அவமானம் வந்தால் அதை தட்டிக் கேட்கிற முதல் ஆளாக இருக்கிறார் சீமான். அவருடன் ஒரு சந்திப்பு


வெற்றி

ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக
வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே
மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள்
நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற
இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன்.
ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம். இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த
அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும்
சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி
மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து
காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க
வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை
மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது
! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு
வாருங்கள்!''

''நான் சீமான் ஆனது எப்படி?''


சீமான்... கோபத் தமிழன்!

அநீதிக்கு எதிராக அனல் வார்த்தைகள் பேசும் சீமானின் பேச்சு, சுய மரியாதையின் அடையாளம். ஈழத்தின் இன அழிப்புக்கு எதிராக உலகெங்கும் ஒலிக்கும் குரல். சிவகங்கை பக்கத்துக் கிராமத்தில் பிறந்த சீமான், நவீன தமிழ் தேசிய அரசியலுக்குள் நுழைந்தது எப்படி? ''சிவகங்கை அருகில் அரணையூர் என் கிராமம். வானம் பார்த்த பூமியில் மிளகாயும் நெல்லும் பயிரிட்டு வாழும் எளிய வெள்ளாமைக் குடிகள் நாங்கள். உள்ளூர் தொடக்கப் பள்ளியில் பள்ளிப் படிப்பு. எங்கள் ஊரைச் சுற்றி பல்வேறு கிராமிய நாடகங்களும் கூத்துக்களும் நடக்கும். அதைப் பார்த்துவிட்டு வந்து அதேபோல வீட்டில்நடித்துக் காட்டுவேன். அது படிப்படியாக வளர்ந்து, கலை வடிவங்கள் மீது பெரிய ஈர்ப்பு வந்தது. இளையான்குடியில் பள்ளிப் படிப்புக்குப்போன போதும் கலை ஆர்வம் தொடர்ந்தது.

ஐ.டி கம்பெனி வேலை வேண்டுமா? இதப் படிங்க!

முதன்முதலாய்ப் பேச்சுவழக்கில் இடுகை. தகவல்தொழில்நுட்பத்துறையில் தடம்பதிக்க விரும்பும் புதியவர்களுக்காக எனது அனுபவத்தில் பெற்றதையும், நண்பர்களிடமிருந்து கற்றதையும் அறிவுரையாக இல்லாமல் ஆலோசனைகளாகத் தருகிறேன். அறிவுரைக்கத் தகுதியும், விருப்பமும் இல்லை!


கால்மேல் காலிட்டு அறிவுரைக்கும் அதிகாரியின் தோரணையின்றித் தோளில் கைவைத்துப் பேசும் தோழமை உணர்வை வட்டார வழக்குதான் தரமுடியும். IT யில் வேலைதேடுபவர்களுக்குத் தகவலும், தேடியவர்களுக்குப் புன்னகையும் உத்தரவாதம். வரவேற்பைப் பொறுத்து வட்டார வழக்கில் தொடர உத்தேசம்.

வாங்க! வேலை தேடுவோம்!

*கடைசிவருஷம் படிக்கும்போதே IT கம்பெனிக் கனவு வருதா? கருத்தாப் படிங்க. படிப்ப முடிங்க. வாங்க மக்கா சென்னைக்கு!

*கலங்குன கண்ணோட, கண்ணுல கனவோட, மஞ்சப்பையோட கோயம்பேட்ல எறங்கியாச்சு. அடுத்து?

*நண்பன், நண்பனோட நண்பன்னு ஏதாச்சும் லிங்க் பிடிச்சுத் தங்குங்க. (கொஞ்ச நாளைக்குத்தான்) ரெண்டு நாள் சென்னையச் சுத்துங்க. அதுக்கு மேல காசிருக்காது. எடங்கள, மனுசங்களைப் பழகிக்கிடுங்க.

*அனுபவமுள்ள ஆளுககிட்ட உங்க கதயச் சொல்லுங்க. அவுக உதவியோட 2 பக்கத்துக்குள்ள உங்களப் பத்துன பயோடேட்டா தயாரிங்க. காலேஜ் ப்ராஜெட் பத்தி விவரமா எழுதுங்க. காதலு, ப்ராஜெக்ட்ல சேத்தியில்ல. வேலைவாய்ப்புக்குன்னு கொள்ள வெப்சைட் இருக்கு. அதுல பதிஞ்சிருங்க.

* கன்ஸல்டண்ட்னு ஒரு குருப் இருக்கு. தெருவுக்குத் தெரு இருப்பாய்ங்க. இன்ஃபோஸிஸ்லேர்ந்து இன்னிக்குத் தொறக்கிற கம்பெனி வரைக்கும் எங்களுக்கு கிளையண்ட்ன்னு வெப்சைடல வெளுப்பாய்ங்க. வெளுத்ததெலாம் வெண்ணையாகுமா? நல்லவய்ங்களத் தேடித்தான் பிடிக்கணும்! அவசரப்பட்டுப் பணம் குடுத்து ஏமாறாதீங்க.

* அறிஞ்ச தெரிஞ்ச மக்கள் எல்லார்கிட்டயும் வேலை தேடுறத வெளிப்படையாச் சொல்லுங்க. ஹெல்ப் கெடைக்கலாம். சென்னைக்கு வந்ததுமே பந்தா தோணும். வேணவே வேணாம். பெருமைக்கு எரும மேச்சதெல்லாம் ஊரோட போகட்டும்!

* இண்டர்வியூகால் காவிரி மாதிரி மெதுவாத்தான் வரும். வரும்போது கவனமாப் பேசணும். அவுட்கோயிங் இல்லாட்டியும் சார்ஜ், இன்கமிங் சரியா இருக்கணும். கம்பெனிய வேடிக்க பாக்கப் போனவனுக்கெல்லாம் வேலை குடுத்தது அந்தக்காலம். ரிசெசன்ல இருக்கோம். பார்த்து சூதானமா தேடிப் புடிங்க. இந்திய மூளைக்கு என்னிக்கும் மதிப்பிருக்கு. முயற்சிய நிறுத்தாதீங்க. இது உங்க மொத இண்டெர்வியூவா இருக்கலாம். பதறாதீங்க. கண்டிப்பாக் கடைசி இண்டெர்வியூ இல்ல!

*இத்தனாந்தேதி இந்த நேரத்துக்கு இண்டெர்வியூ. வா ன்னு கம்பெனி கூப்பிடும்போது படிச்சீங்களோ இல்லையோ குளிச்சிருங்க. கோடக் காலமா இல்லியா. நம்பிக்கை தரக்கூடிய நல்ல துணிமணிகளப் போட்டுக்கிட்டுக் கிளம்புங்க. நேரத்துக்குப் போகணும்னா இடத்தப் பத்துன விவரங்களக் கேட்டுத் தெரிஞ்சு வச்சுருக்கணும். கண்ணாடிக் கதவுகளயும், ஏக்கர் கணக்கு ஆபீஸையும் கண்டு மெரளக் கூடாது. தகிரியமாத் தட்டுங்க கதவ!

* கொஞ்சமாவது இங்கிலீசு பேசியே ஆகணும். அதுக்கு ஒரே வழி தப்புத்தப்பா பேசி இருக்குறவய்ங்களுக்கு இம்சயக் குடுக்குறதுதான். ஒரேடியாக் குடுத்தா ஓட்டிவிட்ருவாய்ங்க. கவனம். ஜாவாவோ, என்னவோ தெளிவாப் படிச்சு வச்சுக்கிடுங்க. கொஞ்சம் இங்கிலீசு, நிறைய டெக்னிக்கல் அறிவு இருந்தாக் கதவு தன்னால தொறக்கும்.

* இண்டெர்வியூல இருக்கோம். எதுத்தாப்ல இருக்குறவனும் மதுரைல மாடு மேச்சவனாத்தான் இருப்பான். ஆனாலும் பக்கிங்ஹாம் அரண்மனை வாசல்ல கண்டுபிடிச்ச குழந்த மாதிரியே மொரட்டு ஆங்கிலத்துல மெரட்டுவான். அசரக்கூடாது. நாமளும் விடாம அடிக்கணும். சின்னச்சின்ன வார்த்தைகளாப் பேசுங்க. சரியாப் புரியும்.

* கேள்வி கேக்குறவனுக்கு மெட்ராஸ் ஐ ன்னாலும் அவன் கண்ணப் பாத்துதான் பேசணும். வெளிய வந்து அப்புறமா கண்ணக் கசக்கிக்கலாம். முடியாது, தெரியாது, கிடையாது இதெல்லாம் சொல்லக்கூடாது. இதயே வேறமாதிரி நேக்கா கத்துக்கிருவேன், தெரிஞ்சிக்கிருவேன் இப்பிடிப் பேசணும்.

* பொதுவா ரெண்டு ரவுண்டு இல்ல மூணு ரவுண்டு நடக்கும். (இண்டெர்வியூவச் சொன்னேன்!) டெக்கினிக்கலத் தாண்டுனா HR! காவல்துறை கணக்காக் கேள்விகள் கேப்பாய்ங்க. நம்ம என்ன குத்தம் செஞ்சுட்டா வந்தோம்? தயங்காம தன்னம்பிக்கையோட கேள்விகளை மீட் பண்ணுங்க. வேல கிடெச்ச பெறவு கேள்வி கேட்டவனக் கொள்ளக் கேள்வி நாம கேப்போம்ல!

*HR நீங்க எப்பிடின்னு தெரிஞ்சுக்கிறதுக்காக பொத்தாம் பொதுவான, பழைய, பழகிப்போன கேள்விதான் கேப்பாய்ங்க. நான் எதுக்கு உன்ன வேலைக்கு எடுக்கணும்? (என்னவோ இவரு முதல் போட்டு ஆரம்பிச்ச கம்பெனி மாதிரி!) புள்ளகளப் பிக்கப் பண்ணி செண்ட்அடிச்சு செட்டிலாகுறதுன்னு சொல்றதுதான் நேர்மையான பதிலு. ஆனா, நேர்மைக்கு வேல கிடையாது. அதனால, உங்க கம்பெனிக்குப் பகல்ல நாயா இருப்பேன். ராத்திரி பேயாவும் இருப்பேங்கற மாதிரிப் பேசிப்புடணும். இதுக்குத் தயாராகிறதுக்கு நெட்ல நிறைய இருக்கு. எறக்கிப் படிங்க. ஏற்கனவே இண்டெர்வியூ போன நண்பர்கள்கிட்டத் தயங்காமக் கேளுங்க. அவுக சொல்றதே சுவாரசியமா இருக்கும்!

*செலக்ட் ஆனா மெயில் வரும். சொன்ன தேதில அவுக கேக்கிற காகிதங்களப் பிக்கப் பண்ணிட்டு கெளம்புங்க. ஆஃபர பூசாரிகிட்ட விபூதி வாங்கறமாதிரி வாங்கணும். ஆஃபரக் கையில வாங்கினதும் ஆஃப் அடிச்சமாதிரி இருக்கும். உணர்ச்சிகளக் கட்டுப்படுத்திக்கிட்டுக் கையெழுத்தப் போட்டுட்டு ரிசப்ஷன் புள்ளகளை சைட் அடிக்காமக் கெளம்புங்க.

ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS

ஆரோக்கியம் / உடல் நலம்

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

காதல் கிறுக்கல்கள்

இதயம் என்பது துடிப்பதற்கு மட்டும் அல்ல !
உன்னை நினைப்பதற்கும் !

தோற்பதும் பிடிக்கும் என் பிரியமானவளிடம் !

அன்பே !
என் பெயரின் அழகு புரிந்தது ,
உன்னால் உச்சரிக்க பட்ட பிறகு !

காற்றிடம் சிக்கி தவிக்கிறது கடல் அலைகள் !
என்னிடம் சிக்கி தவிக்கிறது உன் நினைவலைகள் !

அன்பே !
நீ சிலையாய் வந்தாய் !
உன்னை பார்த்தபின் நானும் ஆனேன் சிலையாய் ,என்னை மறந்து உன் அழகில்!

என் இதயத்தை ஏன் உன் அன்பென்னும் கயிற்றால்
கட்டி இழுக்கிறாய் !
நானே தருகிறேன் ,
உன் அன்புக்கு நான் என்றுமே அடிமையடி !

உன் உதடுகளின் உச்சரிப்பிற்காக காத்திருக்கிறேன்
கண்களை மூடி உன் நினைவுகள் கலையாமல் !

நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ,
என் இதயத்தின் ஆயுளை கூட்டுதடி !

அன்பே !
நான் எழுதிய முதல் கவிதை ,
வேறென்ன
உன் பெயர் தானடி !

நீ நடந்த சாலை என் பூங்காவனம் !
அதில் உன் பிம்பம் விழுந்தே பூக்கள் பூக்கும் !

உன்னை பார்த்தபின் அழகான சிலையும் கல்லாகும் !
இருந்தால் உன் போல் வேண்டும் என்று !

வேண்டுமடி எனக்கு !
தாய் காட்டாத பாசம் ,
வெட்கம் கலந்த புன்னகை ,
காதலின் ஸ்பரிசம்
நட்பின் நேசம் ...


என் பெயர் தவம் கிடந்ததோ !
ஒரு நாள் உன் உதடுகள் உச்சரிக்கும் என்று !

மொழியே தேவையில்லை , என்னருகே நீயிருந்தால் !
போதுமடி உன் கண்கள் பேசும் மௌன மொழி !
நல்ல மனிதர்களை இழக்க முடியுமா?

எங்களில் எத்தனை பேர் தங்களின் வாழ்க்கை ‘நரகமாகிவிட்டது’, ‘சொர்க்கமாகிவிட்டது’ என்றெல்லாம் அலட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மறந்து தற்செயலாக ஏன் என்று கேட்டால் போதும் பக்கத்து வீட்டுக்காரன்ல இருந்து பின்னால திரிஞ்சு காதலித்த காதலி வரை காரணம் சொல்ல கூப்பிடுவினம்.


இவற்றை எல்லாம் தீர்மானிக்கப்போவது நான்கெழுத்து மந்திரம் தான். அது வேறொன்றும் இல்லை……

புரிதல் ….

ஒரு சமூக கட்டமைப்பில் வாழத் தொடங்கிய பிறகு புரிதல் இல்லாத வாழ்க்கை வாழ்வது என்பது சாத்தியமற்றது.


ஓவ்வொருவருடைய வாழ்க்கையிலயும் பல விதமான உறவுகள் இருக்கின்றது. அந்த உறவுகளுக்கு நிகராக சிக்கல்களும் இருக்கத்தான் செய்யும். உங்கள் செயற்பாடுகள் அதிகமாகும் போது உறவுகளின் எண்ணிக்கையும் அதிகமாகும். சிக்கல்களும் அதிகரிக்கத்தான் செய்யும்.


அந்த சிக்கல்களுக்குப் பயந்து நாம் உறவகளை வெட்டிவிட முடியாது. உறவுகள் அதிகரிக்க அதிகரிக்க புரிதலை அதிகரித்துக் கொண்டே போவதில்; தான் பிரச்சினையே இருக்கிறது.


நீங்கள் ரூமில் இருப்பவராக இருந்தால், கூட இருப்பவரைப் புரிந்து கொண்டால் போதும். அதே நேரம் பலரை நிர்வகிக்கும் நிலையில் இருந்தால் நீங்கள் அத்தனை பேரையும் புரிந்து கொள்ளுதல் அவசியம். உங்;களை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என நினைப்பது தவறானது.


அப்போதுதான் சூழ்நிலைக்கேற்ற மாதிரி அவர்களை இயக்க முடியும். அனைவரும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தால் அது பகல் கனவு தான். அதற்காக எல்லோரையும் புரிந்து கொள்ள முடியாது.


உ-ம் நல்ல நண்பர்கள் போல பழகிக் கொண்டு பிறருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டுபவர்களை ஒன்றும் செய்ய இயலாது.

இயலுமானவரை எவ்வளவு முயற்சிக்கிறீர்களோ அவ்வளவும் போதும். மனிதனால் குறிப்பிட்டளவு தான் ஊகிக்க முடியும் குறிப்பிட்ட எல்லைவரை தான் எதையும் பொறுத்துக் கொள்ள முடியும். புரிந்து கொள்ளும் போது தான் உறவுகள் நெருக்கமாகவும் வாய்ப்புள்ளது. அடுத்தவர் உங்களை புரிந்து கொள்ளவே மறுப்பதாக நினைக்கக் கூடாது. பிறர் உங்களை நன்றாக புரிந்து கொள்வதற்கான சூழைலை உருவாக்க வேண்டும். (விதண்டாவாதம் செய்பவர்கள் இந்த விதிமுறைக்குள் உள்ளடங்கமாட்டார்கள்).


துரதிஷ்டவசமாக மிக நெருக்கமான இருவர் மத்தியில் ஏற்படும் மோதலானது எதிரிகளுக்கிடையில் ஏற்படும் மோதல்களைவிட மோசமாகவே இருக்கும். இதற்குக் காரணம் இருவருடைய புரிதலும் அந்த நேரத்தில் (சற்று) வேறுபட்டிருக்கலாம். அவர்கள் சில வேளை எல்லைக் கோட்டினைக்கடந்தால் வெறிபிடித்தவர்கள் போல மாறிவிடுவார்கள்.


அடுத்தவரின் புரிந்து கொள்ளும் தன்மையை நீங்கள் உணர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களுடைய குறைபாடுகளையும் திறமைகளையும் இயல்பாகவே ஏற்றுக்கொள்கிறீர்கள்.


ஓவ்வொருவரிடம் ஒவ்வொரு குணாம்சங்கள் இருக்கும். இவை அனைத்தையும் உங்கள் புரிதலுக்குள் கொண்டு வந்துவிட்டால் உங்கள் விருப்பம் போல் உறவுகளை அமைத்துக் கொள்ளலாம்.


உங்களுடைய வாழ்வில் ஒவ்வொருவருடைய உறவும் எப்படி இருக்க வேண்டும் என முடிவு செய்பவர் நீங்காளாக இருக்க வேண்டுமானால் உங்கள் புரிதலுக்குள் அனைத்தையும் அனைவரையும் கொண்டு வாருங்கள். மனிதர்களின் பைத்தியகாரத்தனத்தையும் தாண்டி அவர்களைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவத்தை உங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும்.


உங்களைச்சுற்றி அருமையான மனிதர்கள் இருக்கிறார்கள். அவ்வப் போது சில சமயம் சில நிமிடங்களுக்கு அவர்கள் பைத்தியகாரத்தனமாக நடந்து கொள்வார்கள்.


இதனைப்புரிந்து கொள்ளாவிட்டால் நீங்கள் அவர்களை இழக்கநேரிடும். புரிந்து கொண்டால் அவர்களைக் கையாளும் விதம் உங்களுக்குத் தெரிந்து விடும். வாழ்க்கை ஒரு போதும் நேரான கோடு அல்ல.
புரிந்து கொள்ளும் தன்மையை நீங்கள் இழந்தால் உங்கள் செயல் திறனையும் இழக்க நேரிடும். சுற்றியுள்ளவர்களை இயலுமான வரை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். புரிதல் என்பது சாலச்சிறந்த மருந்து.


(மேற்கூறியது இவர்களுக்கு பொருத்தமாகாது - புரிந்து கொள்ளும் தன்மை இல்லாதவர்களுக்கு, எடுத்தெறிந்து நடப்பவர்களுக்கு, நண்பனாகப் பழகிக்கொண்டு தீயவர்களுடன் சேர்ந்து துரோகமிழைக்க நினைப்பவர்களுக்கு, தாங்கள் சொன்னதே சரியென்று விடாப்பிடியாக இருப்பவர்களிடம்)

முப்பது வினாடி உரை

வாழ்க்கையைப் பற்றி கோகா கோலா தலைவர் (திரு.பிரையன் டைசன்) நிகழ்த்திய முப்பது வினாடி உரை இங்கே.

வாழ்க்கையை ஐந்து பந்துகளுடன் விளையாடும் ஒரு விளையாட்டாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த பந்துகளாவன: வேலை (தொழில்) , குடும்பம், உடல்நலம், நண்பர்கள் மற்றும் ஆன்மிகம் (அல்லது சுய தேடல்). அனைத்தையும் மாற்றி மாற்றி காற்றில் சுழல வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

தத்துவம் 2010

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக்
கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது.
அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக்
கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என்
காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம்
"வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

புகை பிடிப்பதால் 25 நன்மைகள்

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டாலே மறைந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும்.
நாட்டுக்கு உதவுகிறீர்கள். சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.
நாற்றம் பிடித்த மோசமான சுற்று சூழலில் இருக்க வேண்டி வந்தாலும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகையால் எல்லா அசிங்கங்களையும் மறைத்து புகை மேகத்துக்குள் இருப்பது. தேவலோகத்தில் இருப்பது போல, மேகத்துக்கிடையே சஞ்சரிப்பது போன்ற அனுபவம் தரும்.
சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப் புறத்தின் எந்த நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும் ஒன்றும் பெரிதாக தெரியாது.

இணையத்தில் ஒரு கணணி வியத்தகு இணையவழி இலவச இயங்குதளம்

ஆச்சரியப்பட கூடியவிதத்தில் இணையத்தில் கணணியை உருவாக்கியுள்ளார்கள் இணைய வல்லுனர்கள். இந்த இணையத்தில் கணணி என்பது (A computer in a web page) நீங்கள் கணணியை ஆரம்பித்து கடவுச்சொல் வழங்கி கணணி திறக்கும் போது கணணித்திரை (Desktop) எமது கண்களுக்கு எவ்வாறு புலப்படுகின்றதோ அவ்வாறு http://g.ho.st என்னும் இணையத்தளத்தில் இணையக்கணணி என்று அழைக்கப்படக்கூடிய விதத்திலே இவ் இணையத்தளமானது உருவாக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்