நல்ல மனிதர்களை இழக்க முடியுமா?

எங்களில் எத்தனை பேர் தங்களின் வாழ்க்கை ‘நரகமாகிவிட்டது’, ‘சொர்க்கமாகிவிட்டது’ என்றெல்லாம் அலட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மறந்து தற்செயலாக ஏன் என்று கேட்டால் போதும் பக்கத்து வீட்டுக்காரன்ல இருந்து பின்னால திரிஞ்சு காதலித்த காதலி வரை காரணம் சொல்ல கூப்பிடுவினம்.


இவற்றை எல்லாம் தீர்மானிக்கப்போவது நான்கெழுத்து மந்திரம் தான். அது வேறொன்றும் இல்லை……

புரிதல் ….

ஒரு சமூக கட்டமைப்பில் வாழத் தொடங்கிய பிறகு புரிதல் இல்லாத வாழ்க்கை வாழ்வது என்பது சாத்தியமற்றது.


ஓவ்வொருவருடைய வாழ்க்கையிலயும் பல விதமான உறவுகள் இருக்கின்றது. அந்த உறவுகளுக்கு நிகராக சிக்கல்களும் இருக்கத்தான் செய்யும். உங்கள் செயற்பாடுகள் அதிகமாகும் போது உறவுகளின் எண்ணிக்கையும் அதிகமாகும். சிக்கல்களும் அதிகரிக்கத்தான் செய்யும்.


அந்த சிக்கல்களுக்குப் பயந்து நாம் உறவகளை வெட்டிவிட முடியாது. உறவுகள் அதிகரிக்க அதிகரிக்க புரிதலை அதிகரித்துக் கொண்டே போவதில்; தான் பிரச்சினையே இருக்கிறது.


நீங்கள் ரூமில் இருப்பவராக இருந்தால், கூட இருப்பவரைப் புரிந்து கொண்டால் போதும். அதே நேரம் பலரை நிர்வகிக்கும் நிலையில் இருந்தால் நீங்கள் அத்தனை பேரையும் புரிந்து கொள்ளுதல் அவசியம். உங்;களை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என நினைப்பது தவறானது.


அப்போதுதான் சூழ்நிலைக்கேற்ற மாதிரி அவர்களை இயக்க முடியும். அனைவரும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தால் அது பகல் கனவு தான். அதற்காக எல்லோரையும் புரிந்து கொள்ள முடியாது.


உ-ம் நல்ல நண்பர்கள் போல பழகிக் கொண்டு பிறருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டுபவர்களை ஒன்றும் செய்ய இயலாது.

இயலுமானவரை எவ்வளவு முயற்சிக்கிறீர்களோ அவ்வளவும் போதும். மனிதனால் குறிப்பிட்டளவு தான் ஊகிக்க முடியும் குறிப்பிட்ட எல்லைவரை தான் எதையும் பொறுத்துக் கொள்ள முடியும். புரிந்து கொள்ளும் போது தான் உறவுகள் நெருக்கமாகவும் வாய்ப்புள்ளது. அடுத்தவர் உங்களை புரிந்து கொள்ளவே மறுப்பதாக நினைக்கக் கூடாது. பிறர் உங்களை நன்றாக புரிந்து கொள்வதற்கான சூழைலை உருவாக்க வேண்டும். (விதண்டாவாதம் செய்பவர்கள் இந்த விதிமுறைக்குள் உள்ளடங்கமாட்டார்கள்).


துரதிஷ்டவசமாக மிக நெருக்கமான இருவர் மத்தியில் ஏற்படும் மோதலானது எதிரிகளுக்கிடையில் ஏற்படும் மோதல்களைவிட மோசமாகவே இருக்கும். இதற்குக் காரணம் இருவருடைய புரிதலும் அந்த நேரத்தில் (சற்று) வேறுபட்டிருக்கலாம். அவர்கள் சில வேளை எல்லைக் கோட்டினைக்கடந்தால் வெறிபிடித்தவர்கள் போல மாறிவிடுவார்கள்.


அடுத்தவரின் புரிந்து கொள்ளும் தன்மையை நீங்கள் உணர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களுடைய குறைபாடுகளையும் திறமைகளையும் இயல்பாகவே ஏற்றுக்கொள்கிறீர்கள்.


ஓவ்வொருவரிடம் ஒவ்வொரு குணாம்சங்கள் இருக்கும். இவை அனைத்தையும் உங்கள் புரிதலுக்குள் கொண்டு வந்துவிட்டால் உங்கள் விருப்பம் போல் உறவுகளை அமைத்துக் கொள்ளலாம்.


உங்களுடைய வாழ்வில் ஒவ்வொருவருடைய உறவும் எப்படி இருக்க வேண்டும் என முடிவு செய்பவர் நீங்காளாக இருக்க வேண்டுமானால் உங்கள் புரிதலுக்குள் அனைத்தையும் அனைவரையும் கொண்டு வாருங்கள். மனிதர்களின் பைத்தியகாரத்தனத்தையும் தாண்டி அவர்களைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவத்தை உங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும்.


உங்களைச்சுற்றி அருமையான மனிதர்கள் இருக்கிறார்கள். அவ்வப் போது சில சமயம் சில நிமிடங்களுக்கு அவர்கள் பைத்தியகாரத்தனமாக நடந்து கொள்வார்கள்.


இதனைப்புரிந்து கொள்ளாவிட்டால் நீங்கள் அவர்களை இழக்கநேரிடும். புரிந்து கொண்டால் அவர்களைக் கையாளும் விதம் உங்களுக்குத் தெரிந்து விடும். வாழ்க்கை ஒரு போதும் நேரான கோடு அல்ல.
புரிந்து கொள்ளும் தன்மையை நீங்கள் இழந்தால் உங்கள் செயல் திறனையும் இழக்க நேரிடும். சுற்றியுள்ளவர்களை இயலுமான வரை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். புரிதல் என்பது சாலச்சிறந்த மருந்து.


(மேற்கூறியது இவர்களுக்கு பொருத்தமாகாது - புரிந்து கொள்ளும் தன்மை இல்லாதவர்களுக்கு, எடுத்தெறிந்து நடப்பவர்களுக்கு, நண்பனாகப் பழகிக்கொண்டு தீயவர்களுடன் சேர்ந்து துரோகமிழைக்க நினைப்பவர்களுக்கு, தாங்கள் சொன்னதே சரியென்று விடாப்பிடியாக இருப்பவர்களிடம்)

முப்பது வினாடி உரை

வாழ்க்கையைப் பற்றி கோகா கோலா தலைவர் (திரு.பிரையன் டைசன்) நிகழ்த்திய முப்பது வினாடி உரை இங்கே.

வாழ்க்கையை ஐந்து பந்துகளுடன் விளையாடும் ஒரு விளையாட்டாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த பந்துகளாவன: வேலை (தொழில்) , குடும்பம், உடல்நலம், நண்பர்கள் மற்றும் ஆன்மிகம் (அல்லது சுய தேடல்). அனைத்தையும் மாற்றி மாற்றி காற்றில் சுழல வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

தத்துவம் 2010

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக்
கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது.
அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக்
கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என்
காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம்
"வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

புகை பிடிப்பதால் 25 நன்மைகள்

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டாலே மறைந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும்.
நாட்டுக்கு உதவுகிறீர்கள். சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.
நாற்றம் பிடித்த மோசமான சுற்று சூழலில் இருக்க வேண்டி வந்தாலும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகையால் எல்லா அசிங்கங்களையும் மறைத்து புகை மேகத்துக்குள் இருப்பது. தேவலோகத்தில் இருப்பது போல, மேகத்துக்கிடையே சஞ்சரிப்பது போன்ற அனுபவம் தரும்.
சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப் புறத்தின் எந்த நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும் ஒன்றும் பெரிதாக தெரியாது.

அண்மைய செய்திகள்