சொர்க்கத்த ;ில் பில் கேட்ஸ்

நம்ம பில்கேட்ஸ் செத்து போயி.. கடவுள் கிட்டே போய் நின்னாரு.
நம்ம கடவுளுக்கே கன்ஃபூஷன். இன்னாடா இவன் நல்லது பன்னிகிறானா இல்ல கஸ்மாலம் கெட்டது பண்ணிகிறனா ?. இவன எங்கே உடறது ? சொர்க்கமா நரகமா ந்னு பயங்கர கன்ஃபூஷன். நம்மாளுகிட்டயே கேட்டாரு கடவுளு.
'ஏம்பா பில்லு.. எல்லா வூட்லயும் கம்பூட்டர் இருக்குன்னா நீ ஒரு ரீசனு. அதுக்காக உனுக்கு சொர்க்கத்துல இடம் தர்லாம்ன்னு பார்த்தா.. நீ தான் விண்டோ ஸ் கம்னாட்டியையும் கண்டு பிடிச்சிருக்க்கே... நம்மளாண்ட உன் மேலுகா வந்த சாபம் கன்னா பின்னானு கீது. அதனால உன்னை நரகத்துக்கு தான் அனுப்பணும். எனுக்கு சர்யா தெர்ல.. அதனாலே நீயே டிசைட் பண்ணு உன்கு என்னா வேணும்னு.. ' கடவுள் சொன்னார்.


பில்கேட்ஸ் குஷியாய்டாரு. ஆனா அவருக்கு தான் சொர்க்கம் நரகம் எப்படி இருக்கும்ன்னு தெரியாதே. ( விண்டோ ஸ் ஒரு நரகங்கிறதை தவிர ). அதனால கடவுள் கூட்டிட்டு போனாரு.
முதல்ல நரகம்.
ஆஹா.. அழகான கடற்கரை. அழகா இருக்கே... பில்கேட்ஸ் க்கு குஷி. அந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பீச் சைட்ல துணியை ஈரமாக்கி உடம்ப காயவெச்சிட்டிருக்காங்க. இந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பசங்களும் பொண்ணுங்களும் சேர்ந்து குஜால்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. உட்டாலக்கடி செவத்த தோலு தான்.. கொஞ்சம் உத்து பார்த்தா... ந்னு வாலி பாட்ட பாடிட்டே பில்லு செம குஷியாய்ட்டாரு.
ஐயாவுக்கு ரொம்ப திருப்தி. ஆனாலும் நரகமே இப்படி இருக்குன்னா சொர்க்கம் ?
கடவுள் அவனை சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போனாரு.
அங்கே மேகமும், தேவதைகளும், பாட்டும்.. ம்ம்ம்ம் பில் கேட்ஸ் பாத்தாரு.ம்ம்... நல்லாதேன் இருக்கு ஆனாலும்...நரகம் தான் கும்முன்னு இருக்கு...
சரி.. கடவுளே... நான் நரகத்துக்கே போறேன். பில்கேட்ஸ் வழிஞ்சாரு. கடவுள் அவரை நரகத்துக்கு அனுப்பிட்டாரு,
கொஞ்ச நாள் கழிச்சு கடவுள் நம்ம பில்லு ஐயா எப்படி இருக்காருன்னு பாக்க நரகத்துக்கு போனாரு.
அங்கே ஒரு குகையில தீய்க்கு நடுவுல நம்ம பில்லு ! ஹீட்டுக்கு நடுவுல கேட்ஸ் ந்னு கடவுள் பாடிட்டே போனா.. கேட்ஸ்க்கு கடுப்பு.
யோவ் கடவுளே.. என்னவோ காட்டிட்டு இப்படி என்னவோ பண்ணிட்டியே... ந்னு கத்துனாரு. கடவுளுக்கு புரியல..
இன்னாபா.. இன்னா மேட்டரு.. கடவுள் கேட்டாரு.
அன்னிக்கு பாத்தப்போ.. பீச் இருந்துச்சி, பீச் ல வாச் பண்ற மாதிரி பிகருங்க இருந்திச்சி, இங்கே வந்து பாத்தா தீ மட்டும் தான் இருக்கு.. நான் ஏமாத்தலாம். கடவுளே ஏமாத்தலாமா.. கேட்ஸ் கத்துனாரு.
\u003cdiv\>கடவுள் சிரிச்சாரு.. ஓ.. அதைச் சொல்றியா.. அடப்பாவி..\ அதைப் பார்த்து தான் இங்கே வரணும்ன்னியா... அது நரகத்தோட ஸ்கிரீன் சேவர் டா !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அண்மைய செய்திகள்