எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கரானுங்கனு பாருங்க...(

மக்களே நானும் பொறுமையா இருக்கனும்னு தான் பாக்கறேன்... ஆனா நம்மல விட மாட்டானுங்க போலிருக்கு...

1:
U looking Mallika Sheravath
i looking Imran aasmi
Come let us murder the world

(டேய் நாயே!! நீ முதல்ல இங்கிலிஷ மர்டர் பண்ணிட்ட... அடுத்து ஊர்ல இருக்கறவங்களை கொல்ல போறியா?)

2.
hey annikku Ravi yoda b'day party la Krishna voda vandha Janani yoda school friend Ramya voda boy friend Sriram voda girl friend Anitha voda class mate Vanitha dhaaney nee???
Hi..

(ஏன்டா இப்படியும் அவசியமா கடலை போடனுமா?)

தொந்தி

'காயமே இது பொய்யடா
இது வெறும் காற்றடைத்த பையடா'
இது யாரோ ஒரு சினிமா பாடலாசிரியர் எழுதிய பாடல் அல்ல. இந்த அற்புத வரிகள் ஒரு சித்தரின் சிந்தனையில் உருவானவை.
காயம் என்றால் உடல் என்று பொருள்.
பழங்கால சித்த வைத்தியர் மந்திவாயனார் தனது ஒலைச்சுவடியில் இப்படி குறிப்பிடுகிறார்:
காயத்தில் காயம் ஏற்படின்
காயத்தில் காயத்தை வைத்து கட்டு.
அதாவது,
காயத்தில் (உடலில்)
காயம் (புண்) ஏற்படின்
காயத்தில் (புண்ணில்)
காயத்தை (பெருங்காயத்தை) வைத்து கட்டு
- என்பது பொருள்.

எவ்வளோ பண்றோம்... இத பண்ண மாட்டோமா...

எவ்வளோ பண்றோம்... இத பண்ண மாட்டோமா...’ என்று தமிழகத்தின் விடிவெள்ளி சொன்ன பொன்மொழி, வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு உன்னத தத்துவம். எப்படி? இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படிங்க...பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி.

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.

நம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!

“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”

இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.

கந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”

இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து...”.

சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.

”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி.

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.

இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.

அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி.

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.

டிக் டிக்... டிக் டிக்... டிக் டிக்...

“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா... ” - மனசுக்குள் கந்தசாமி.

”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”

கந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!

கந்தசாமி ஆரம்பித்தார்.

மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.

“தூத்துக்குடி பக்கம். நீங்க?”

தூக்கம்விற்ற காசுகள்

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை

வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!
விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!


> நாங்கள் பூசிக்கொள்ளும்
 > சென்டில் வேண்டுமானால்...
 > வாசனைகள் இருக்கலாம்!
 > ஆனால் வாழ்க்கையில்...?
 

திருமணத்திற்கு

திருமணத்திற்கு முன் அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது?
அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா..
அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை……..
அவள் : என்னை காதலிக்கிறீர்களா…?
அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்…
அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…?
அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற….
அவள் : என்னை முத்தமிடுவீர்களா…?

பிளாக்கரில் தொடர்புடைய இடுகைகளை காட்ட



Posted: 10 Nov 2009 10:32 AM PST
பெரும்பாலும் நமது பிளாக்கிற்கு புதிதாக வருபவர்கள் தேடல் தளங்கள், திரட்டிகள், புக்மார்க் தளங்கள் மூலமாகத்தான் வருவார்கள். இடுகையை வாசித்து முடிந்ததும் கிளம்பி விடுவார்கள்.

உங்கள் பிளாக்கில் மேலும் சிறப்பான அவர்களை கவரும் பக்கங்கள் இருக்கலாம். அவற்றையும் வாசித்தால் உங்கள் பிளாக் அவர்களுக்கு மிகவும் பிடித்து போகலாம். அப்படி பிடித்து போனால் அவர்கள் உங்கள் பிளாக்கை விருப்ப தளமாக தனது கணினியில் புக்மார்க் செய்து கொள்வார்கள் அல்லது ஈமெயில் மூலம் சந்ததாராகி விடுவர், தொடர்பவராகவும் மாறுவர். தொடர்ந்து வாசிக்க வருவார்கள்.

அவர்கள் வாசிக்க அவர்கள் விரும்பும் இடுகைக்கு தொடர்புடைய இடுகைகளை பிரித்து அவர்களுக்கு தனியே பட்டியலிட்டு உதவுவது நம் பிளாக்கிற்கு பொலிவை தரும். உதாரணத்திற்கு நீங்கள் இந்த இடுகையை வாசித்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் பிளாக்கர் தொடர்பாக விசயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர் என்பது புரிகிறது.

அண்மைய செய்திகள்