பிளாக்கரில் தொடர்புடைய இடுகைகளை காட்ட



Posted: 10 Nov 2009 10:32 AM PST
பெரும்பாலும் நமது பிளாக்கிற்கு புதிதாக வருபவர்கள் தேடல் தளங்கள், திரட்டிகள், புக்மார்க் தளங்கள் மூலமாகத்தான் வருவார்கள். இடுகையை வாசித்து முடிந்ததும் கிளம்பி விடுவார்கள்.

உங்கள் பிளாக்கில் மேலும் சிறப்பான அவர்களை கவரும் பக்கங்கள் இருக்கலாம். அவற்றையும் வாசித்தால் உங்கள் பிளாக் அவர்களுக்கு மிகவும் பிடித்து போகலாம். அப்படி பிடித்து போனால் அவர்கள் உங்கள் பிளாக்கை விருப்ப தளமாக தனது கணினியில் புக்மார்க் செய்து கொள்வார்கள் அல்லது ஈமெயில் மூலம் சந்ததாராகி விடுவர், தொடர்பவராகவும் மாறுவர். தொடர்ந்து வாசிக்க வருவார்கள்.

அவர்கள் வாசிக்க அவர்கள் விரும்பும் இடுகைக்கு தொடர்புடைய இடுகைகளை பிரித்து அவர்களுக்கு தனியே பட்டியலிட்டு உதவுவது நம் பிளாக்கிற்கு பொலிவை தரும். உதாரணத்திற்கு நீங்கள் இந்த இடுகையை வாசித்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் பிளாக்கர் தொடர்பாக விசயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர் என்பது புரிகிறது.
ஆனால் இந்த பிளாக்கில் பிளாக்கர் பற்றிய தகவல்களுடன் மென்பொருள்கள், வீடியோ, தொழில்நுட்ப செய்திகள் போன்ற பல விடயங்களையும் பதிவிட்டு வருகிறேன். ஆனால் உங்களுக்கு இவற்றில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். பிளாக்கர் தொடர்பான விசயங்களில் நீங்கள் ஆர்வம் உள்ளவர் எனில் உங்களுக்கு அது தொடர்பான இடுகைகளை தனியே பிரித்து பட்டியலிட்டு காட்டினால் உங்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்தானே? எளிதாக வாசித்து கொள்ள முடியும்.

இந்த இடுகையின் முடிவில் பாருங்கள் பிளாக்கர் தொடர்பான இடுகைகள் பட்டியலிடப்பட்டு இருக்கும். அது போல் சிங்கத்தின் பாசம் : அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற வீடியோ இடுகையை பாருங்கள். அதன் கீழ் இந்த பிளாக்கில் உள்ள வீடியோ இடுகைகள் பட்டியலிடப்பட்டு இருக்கும். இடுகைகளை வாசிப்பவர்களுக்கு இது நல்ல அனுபவத்தை தரும்.

இதை எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம். நீங்கள் பிளாக்கில் எவற்றை பற்றி எழுதுகிறீர்களோ அவற்றிற்கான பொதுவான குறி சொற்களை தேர்ந்தெடுத்து வைத்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் பிளாக்கில் 'வீடியோ, நகைச்சுவை , திரை விமர்சனம், கதை, கவிதை' போன்றவற்றை பெரும்பாலும் எழுதுபவராக இருந்தால் நீங்கள் எழுதும் அனைத்து இடுகைகளிலும் 'Labels for this post:' என்ற பகுதியில் அதற்கு ஏற்ற குறி சொற்களை தவறாது கொடுக்க வேண்டும்.

உதாரணத்திற்கு நீங்கள் எழுதும் அனைத்து கதை இடுகைகளிலும் அந்த இடுகை எழுதும் போது 'Labels for this post:' என்ற இடத்தில் 'கதை' என்ற குறிச்சொல் தவறாது இடம் பெறுமாறு பார்த்து கொள்ள வேண்டும். அந்த இடுகை நகைச்சுவை கதை என்றால் 'கதை, நகைச்சுவை ' என்று கமா(,) மூலம் பிரித்து கொடுக்கவும்.
இது போன்று தனியே பகுத்த பின், ஒவ்வொரு இடுகையின் கீழும் அது தொடர்பான இடுகைகளை பட்டியலிட உங்கள் பிளாக்கின் வார்ப்புரு (Template) நிரலில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். இதற்கான வசதியை இந்த http://brps.appspot.com/ தளம் வழங்குகிறது.

உங்கள் பிளாக்கரின் 'Dashboard' உள் நுழைந்து கொண்டு 'Layout' --> 'Edit HTML' என்பதனை கிளிக் செய்து கொள்ளுங்கள். உங்கள் வார்பபுருவை 'Download Full Template' கிளிக் செய்து தவறாது பேக்கப் எடுத்து கொள்ளவும். அடுத்து 'Expand Widget Templates' என்பதனை தேர்வு செய்து கொள்ளவும்.
இப்பொது HTML நிரலில்
<data:post.body/>
என்பதனை தேடவும். அதன் கீழ் என்ற நிரலை
<div id='related_posts'/>
காப்பி செய்து பேஸ்ட் மூலம் இணைக்கவும்.
அடுத்து HTML நிரலின் கீழே இறுதிக்கு வரவும்.
</body></html>
என்ற வரிகளை தேடவும். அதன் மேலே கீழ்காணும் நிரலை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.

<script src='http://www.google.com/jsapi'/>
<script type="text/javascript">
window.brps_options = {
"title": "<h2>தொடர்புடைய இடுகைகள்</h2>",
"max_results": 10
}
</script>
<script src='http://brps.appspot.com/brps.js' type='text/javascript'/> 
இதில் "max_results": 10 என்பதில் 10 என்பது எத்ததனை தொடர்புடைய இடுகைகள் காட்டப்பட வேண்டும் என்பதனை குறிப்பதாகும். நீங்கள் 5 என்று மாற்றினால் ஐந்து தொடர்புடைய இடுகைகளை காட்டும். 'Save Template' என்பதனை கிளிக் செய்து வார்பபுருவை சேமிக்கவும். அவ்வளவுதான். இப்போது உங்கள் பிளாக்கில் உள்ள ஒவ்வொரு இடுகையையும் தனியாக திறந்து பார்க்கவும். உங்கள் இடுகையின் கீழே அது தொடர்பான இடுகைகளை காணலாம்.
Posted: 10 Nov 2009 06:56 AM PST
தமிழகத்தில் உள்ள சுதந்திர கல்வி திட்டம் தமிழில் எழுத்துகளை வாசிக்க சிரமப்படுகிற மக்களை உருவாக்கி உள்ளது. இவர்கள் யார் எனில் பள்ளி கல்வியில் முதல் மொழியாக ஹிந்தியையும், விருப்ப மொழியாக பிரெஞ்சு, ஜெர்மன், சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளை தேர்ந்து எடுத்து பயின்றவர்கள்.

அனைவரும் தமிழ் மொழியில் பேசுவதால் இவர்களும் தமிழ் மொழியில் சரளமாக பேசுவார்கள். தமிழ் திரைப்படங்களை பார்த்து பரவசம் அடைவார்கள். தமிழ் தொலைக்காட்சிகளை பார்ப்பார்கள். இவர்களும் தமிழர்கள்தான். ஆனால் என்ன இவர்களால் தமிழ் மொழி எழுத்துகளை வாசிக்க இயலாது.

உதாரணமாக இவர்களிடம் "நீ எனது உயிர் நண்பன்" என்று எழுதி காட்டினால் புரியாது. "nee enathu uyir nanban" என்று ஆங்கில எழுத்துகளில் எழுதி காட்டினால் புரிந்து கொள்வார்கள். இது போன்றோரிடம் தமிழ் வலைப்பக்கங்களை காண்பித்ததால் கண்ணை கட்டி காட்டில் விட்டது மாதிரி இருக்கு என்பார்கள்.

இனி இவர்கள் கவலைப்பட தேவை இல்லை. இவர்களுக்கு என்று கூகிள் ஒரு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அது கூகுளின் மொழி எழுத்து மாற்றி.

http://scriptconv.googlelabs.com/ என்ற முகவரிக்கு செல்லுங்கள். நீங்கள் எழுத்து மாற்றவேண்டிய தமிழ் வாசகங்களை காப்பி செய்து அங்கே பேஸ்ட் செய்யுங்கள். 'Convert to : ' என்பதில் 'English' என்பதை தேர்ந்தெடுத்து 'Convert' என்பதனை அழுத்துங்கள்.
இப்போது நீங்கள் கொடுத்த தமிழ் எழுத்துகள், ஆங்கில எழுத்துகளாக மாறி இருக்கும். நீங்கள் அதை வாசித்து தமிழ் அர்த்தம் புரிந்து கொள்ளலாம்.

நீங்கள் ஒரு இணைய பக்கத்தை முழுமையாக எழுத்து மற்ற விரும்பினால் அங்கு மற்ற வேண்டிய இணைய பக்கத்தில் url கொடுத்து Convert to : ' என்பதில் 'English' என்பதை தேர்ந்தெடுத்து 'Convert' என்பதனை அழுத்துங்கள்.

இப்போது நீங்கள் கொடுத்த தமிழ் இணைய பக்கம் முழுதும் ஆங்கில எழுத்துகளில் மாற்றி இருக்கும்.



இந்த வசதியை தமிழ் பேச தெரிந்த (புரிந்து கொள்ள தெரிந்த) தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், நேபாளி, மராட்டி , பெங்காலி , குஜராத்தில் எழுத தெரிந்த மக்களும் உபயோகிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அண்மைய செய்திகள்