யாரிடம்.., புகார் கொடுக்க உன்னைப் பற்றி?

கடமை ..,
நாட்டு உடைமை
ஆகாத வார்த்தை ...


காலம் தவறி
வரும் அரசு பேருந்து,,
தவறாமல் மீதி தராத
நடத்துனர்...,


அரசு மருத்துவமனையில்..
கடைசியாய் நுழையும்
பொதுநல மருத்துவர் ..,
வரிசைக்கும் காசு,
வாங்கும் கம்பவுண்டர்....


ஒவ்வொரு முறையும்
வாக்கு தரும் வேட்பாளர் ..
வாக்கு தவறினாலும்
அவருக்கே வாக்கு
போடும் வாக்களர்கள்...!!!!



எல்லாம் சரியாய் இருந்தும் ..,
எதிர்பார்க்கும் ட்ராபிக் போலீஸ் ..
எதிர்பார்த்ததை எதிர்க்காமல் ,
இயல்பாய் கொடுக்கும் வாகனஓட்டிகள்....


இப்படியே புலம்பி
புகார் கொடுக்க ...இறைவனிடம்
செல்ல ,வழியில் ..,
ஒரு குருடன் ...
அட ..!கடவுளே...நீயும்
கடமையை சரிவர,
செய்யவில்லையே? ...
யாரிடம்..,
புகார் கொடுக்க.
உன்னைப் பற்றி ...,
Abdul Hakim.S

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அண்மைய செய்திகள்