எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே !


ஒரு குழந்தை விளையாடும்போது அதன் உடலில் இருக்கும் உறுப்புகளான கண், கை கால் மூட்டுகள், காது, மூக்கு, தொடும் உணர்வு என அனைத்து
இயக்கங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவதால், குழந்தையின் உடம்பு சீராக இயங்கும்.அத்தகைய இயக்கமின்மைதானே பல நோய்களுக்கு பந்தி வைத்துக் கொண்டிருக்கிறது.நன்றாக விளையாடும் குழந்தைக்கு உடலிலிருந்து அதிக கலோரி வெளியேறுவதால், நன்கு பசிக்கும் .நன்றாக சாப்பிடுவார்கள்.

"காலையில எழுந்து கஷ்டப்பட்டு ருசியா , வெரைட்டியா சமைச்சு கொடுத்தா ...லஞ்சை அப்படியே திருப்பிக் கொண்டு வந்துடுறா எங்க பூஜா " என்று புலம்ப வேண்டிய அவசியம் இல்லாமல் போகும். குழந்தையின் ஜீரண உறுப்புகள் ஒழுங்காக வேலை செய்யும்.

உங்கள் தெரு குழந்தைகள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து 'கண்ணாமூச்சி' விளையாட்டு விளையாடுகிறார்கள்.அவர்களில் ஒன்றிரண்டு குழந்தை மட்டும்
"தேன்மொழி, அமுதா, ரம்யா, சுரேஷ்,கண்ணன், எல்லாரும் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடலாம் ..வாரீங்கலப்பா?" என்று ஒவ்வொருவரிடமும் கேட்டு,அந்த கூட்டத்தை ஒருங்கிணைக்கும் (ORGANISING ).அடுத்து, யார் கண்ணை பொத்தி கொள்வது , கண்டுபிடிப்பது என்று திட்டமிடுவார்கள் (PLANNING).இடையில் யாராவது 'சுரேஷ் தென்னை மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சுட்டு இருக்கான் ' என்று சைகை காட்ட ..பிரச்சனை வந்து, அவனை
விளயாடிலிளிருந்து வெளியேற்றலாம் என்று யாராவது முடிவு செய்தால் .."சரிப்பா இந்த ஒரு முறை மட்டும் இவனை மன்னிச்சு சேர்த்துக்கலாம்" என்று விட்டுக் கொடுக்கும் குணத்தை (adjustment and  adaptability ) பழகுவார்கள்.

கபடி போன்ற டீம் விளையாட்டுகளில்,"நம்ம டீம் கண்டிப்பா ஜெயிக்கணும்" என்று உறுதி ஏற்கும்போது ..அவர்களுக்குள் குழு மனப்பான்மையும்
(Team Spirit),"டேய், நம்ம டீம்ல ஆள் பத்தல,அடுத்த தெரு சங்கர சேர்த்துக்கலாமா..கூட்டிட்டு வாங்கடா" என்கிற முடிவில்
சமூகமயமாதல் பண்பும் (Soacialisation) வளர்கின்றன!

இவற்றையெல்லாம் சிறு வயதிலேயே கற்றுகொள்ளும் குழந்தைதான் ...
வாழ்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அதனைச் செயல்படுத்துகிறது.அதுதான் அவர்களை திறமை உள்ளவராகவும் மனித நேயம் மிகுந்த மனிதர்களாகவும் மிளிர வைக்கிறது.


"எல்லாம் சரி .முன்ன மாதிரியெல்லாம் விளையாடறதுக்கு எங்க இடமிருக்கு..போதுமான நேரமும் இல்லையே ?"என்ற கேள்வியை ரெடியாக
வைத்திருகிறீர்கள்தானே?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அண்மைய செய்திகள்