'சூப்பர் ஸ்மார்ட்' தலைமுறையே ...

   பரீட்சை நேரம் இது! மாணவர்கள் தேர்வை தேவையான      தயாரிப்புகளுடன், பக்குவத்துடன் அணுகவும்,        நன்மதிபென்களை வெல்லவும்
சமூக அக்கறை கொண்ட பெரியவர்கள் சிலர் பகிர்ந்த அறிவுரை, பரிந்துரை...

சைதை துரைசாமி :
(மனிதநேய அறக்கட்டளை தலைவர்)
"ஏற்கனவே நடந்து முடிஞ்ச மாதிரி தேர்வுகள் எல்லாத்திலையும் இடம்பெற்ற எல்லா வினாக்களுக்கும் சாய்ஸ் இல்லாம பதிலை படிச்சு வச்சுகனும்.

மற்ற மாணவர்களோட 'கைடுகளை பார்த்து, ஐயோ! அது நம்ம கிட்ட இல்லையேன்னு பதற வேண்டாம் . எல்லா கேள்விகளும் பாட புத்தகத்துல இருந்துதான் வருமே தவிர, கைடுகளில இல்லைங்கிறத உணரனும்.' நாம எத்தனை சாப்டர்ஸ் முடிச்சிருக்கோம்... இன்னும் எத்தனை முடிக்கலைன்னு
பிளான் பண்ணிக்கலாம். ஆனா, 'அவ நிறைய சாப்டர்ஸ் முடிசிருப்பாலோன்கிற ஒப்பீடு, பாடத்தில இருக்கிற கவனத்த கலைச்சு, மனச அலைபாய வச்சிடும் ...கவனம். SSLC படிச்சிருக்கிற நானே உங்களுக்கு எக்ஸாம் டிப்ஸ் சொல்ற அளவுக்கு வளர்ந்திருக்கும்போது, 'சூப்பர் ஸ்மார்ட்' தலைமுறையான நீங்க எல்லாம் அசதிடுவீங்கதானே?!'


வெ. இறையன்பு, ஐ.ஏ.எஸ்  :
(தமிழக அரசின் சுற்றுலாத் துறை செயலாளர்)
" தேர்வு நாட்களுக்கு இடையில இருக்கிற விதிமுறைகளை பொறுத்து, அந்த நாட்களில படிக்க வேண்டிய சப்ஜெக்ட்கள், சாப்டர்களை திட்டம் போட்டுகிரலாம்.உதாரணமாக, ஆங்கில பாடத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை இருந்தால், 'ஏற்கனவே போதுமான அளவு ரிவைஸ் பண்ணியாச்சு.அதுக்கு ஒரு நாள் போதும்கிற நிலையில உங்களோட தயாரிப்பு இருந்தா, அந்த இன்னொரு நாள் விடுமுறையை கடினமா இருக்கிற வேற ஒரு பாடத்துக்கு பயன்படுதிகிறலாம்.'
'கடிகார முள் எவளுவு நகர்ந்திருக்கு, நாம் எத்தனை பக்கங்கள் படிச்சிருக்கோம்...'ங்கிர கணககொடேயே படிக்காம , முழுசா மனம் ஒன்றி படிக்கணும் .உள்ளங்கைகளுகுள்ள சில நிமிடங்கள் முகத்தை புதைச்சு, ஒற்றடம் கொடுத்து எடுத்தா , கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் .
குறுக்கு வழிகள் எல்லாம் நேர் வழிகளை காட்டிலும் நீளமானது . அதனால், 'நல்ல சூப்பர்வைசரா வரணும், எக்ஸாம் ஹால்ல ' பார்த்துக்கலாம்' னு
எந்த குறுக்கு சிந்தனையும் இல்லாம , நேர்மையான மனசோட கேள்வித்தாளை கையில வாங்கணும்.வழக்கமா எல்லோரும் எழுதிற விடைகளை நாமும் எழுதாம , நமளோட விடை தனித்து தெரியும் அளவுக்கு தனி மொழி நடையில எழுதலாம்.'நிறைய எழுதினா நிறைய மார்க் கிடைக்கும்' னு தேவையில்லாத எக்ஸ்ட்ரா தகவல்களை எழுதினா ,நேரம்தான் விரயமாகும் !"

நன்றி .. ஆனந்த  விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அண்மைய செய்திகள்