கவிதை


"அவள் அன்றே சொன்னாள்
     எனக்கு தெரிந்த எல்லாம்
  உனக்கும் தெரிய வேண்டும் என்று
     இன்று தான் எனக்கு புரிந்தது
  அவளுக்கு மறக்க தெரியும் என்று                                                                                                                                                     

"மலர துடிக்கும் மொட்டுக்கு தெரியாது
  மலர்ந்தால் மரணம் என்று "

 அவளின் அழகை ரசிக்க
    என்னிடம் அழகு இல்லை
 என் இதயத்தை நேசிக்க
    அவளிடம் இதயம் இல்லை    

 உலகம் என்பதில் நீ சின்ன ஜீவன்தான்
 ஆனால் உன்னை நேசிக்கும்
 ஜீவனுக்கு நீதான் உலகம்

அடிக்கடி  பார்கின்ற யாரையும் நேசிக்க முடியாது
நேசிக்கின்ற யாரையும் அடிக்கடி பார்க்க முடியாது
                                                                                                                                                       அழகாய் இருபவர்களை நேசிப்பதை விட
நேசிப்பவரின் அழகை ரசிப்பவருக்கு
அழகான வாழ்க்கை அமையும் .

நீ நேசிப்பதை யாருக்கு வேண்டுமானாலும்
விட்டு கொடு ஆனால்
உன்னை நேசிப்பவரை யாருக்கும்
விட்டு குடுக்காதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அண்மைய செய்திகள்