ப்ளீஸ்... ஒரு கதை சொல்லுங்க!



பல பெற்றோர்கள் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது ."எதனை பேர் உங்கள் குழந்தைகளுக்கு
கதை சொல்றிங்க ?" என்று. 'ஆம்' என்று பதில் சொன்னவர்கள் மிக மிக சொற்பம்.""உங்கள்ள எதனை பேர் ,நீங்க குழந்தையா இருக்கும்போது
கதை கேட்டு வளர்ந்திங்க !" என்ற கேள்விக்கு அரங்கத்தில் இருந்த 80 சதவீதம் பேர் 'ஆம்' என்று பதில் சொன்னார்கள் . நாம் அனுபவித்த சந்தோசத்தை நம் குழந்தைகளுக்கு தர மறுப்பது எந்த விதத்தில் நியாயமாகும் ?

ஏன் கதைக்கு இத்தனை முக்கியத்துவம் தருகிறோம் ? கனமான காரணம் இருக்கிறது /மறுபடியும் காக்கா-நரி கதையையே எடுத்துகொள்வோம் .
'ஒரு ஊர்ல ஒரு கருப்பு காக்கா இருந்துச்சாம் .அந்த காக்கா ரெண்டு ரெக்கயையும் அகலமா விரிச்சு விரிச்சு பறந்துசாம்.பாட்டி மெதுவடை சுட்டு வச்சுருந்தாங்கலாம்.' என்று நீக்கும் கதை.'பறவைகளுக்கு மட்டும்தான் ரெக்கை இருக்கும்.நரியால் பறக்க முடியாது.என்னா, நரி ஒரு விலங்கு .அதுக்கு ரெகைக்கு பதிலா நாலு கால்கள் இருக்கும் ' என்று குழந்தை பல புதிய விசயங்களை இந்த கதையிலிறிந்து கற்றுக் கொள்கிறது.
தன் 'மொழி' திறனையும் பேச்சு திறனையும் சீக்கிரமாக வளர்த்துக் கொள்கிறது ,

'வடை சூடா இருக்கும்போது காக்கா தூக்கிட்டு போயிருந்தா //? என்று நீங்கள் இடம் பார்த்து கதையை நிறுத்தும்போது ,குழந்தையின் 'லாஜிகல்' திறனும் ,'காக்கா வின் வடையை நரி ஏமாத்தி தூக்கிட்டு போனது தப்புதானே அம்மு !" என்கிற உங்கள் கேள்வியில் ,'அடுத்தவர்களை ஏமாற்றக் கூடாது ' என்கிற வாழ்வியல் மதிப்பீடுகள் சார்ந்த அற, ஒழுக்க சிந்தனைகளையும் நாம் சொல்லும் கதை மூலம் குழந்தை கற்றுக் கொள்கிறது .

மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கு .'பொய் சொல்லல் பாவம்' என்ற அற நெறியை கற்றுக் கொடுத்து ,'மகாத்மா காந்தி ' யாக மாற்றியது ' ஹரிச்சந்திரன் - சந்திரமதி ' கதைதானே?!

எனவே , உங்கள் குழந்தைகளுக்கு சொத்து சேர்பதைவிட முக்கியம் , நல்ல கதைகள் சொல்வது . அவை அவர்களின் வளர்ச்சிக்கான அறிவு, பண்பு, குணம் , கற்பனைத்திறன், ஒழுக்கம், வாழ்வியல் அறநெறி அத்தனையும் செலவில்லாமல் கொடுத்து  விடும்.இன்றைய தலைமுறை , சுயநலம் மிக்க தலைமுறையாக வளர்ந்து வருகிறது என்கிற பேச்சு பரவலாக எழுந்துள்ளது .கதையில்ல வாழ்க்கை முறையும் கூட அதற்கு காரணமாக இருக்கலாம் .

யோசியுங்கள் ..சொல்ல துவங்குங்கள் உங்கள் குழந்தைக்கு சின்ன சின்ன கதைகளை !


நன்றி .. அவள் விகடன்.




2 கருத்துகள்:

  1. கதைகளின் குழந்தைகளின் திறனை வளர்க்கிறது என்பது உண்மை ..வயிற்றில் இருக்கும் போதே குழந்தையின் கவனம் முழுவதும் வெளி இடங்களில் இருக்கிறது ..அப்போதே கிரகிக்க தொடங்கி விடுவார்கள் :)நல்ல பதிவு :)
    http://ethamil.blogspot.com/2011/02/blog-post_16.html

    பதிலளிநீக்கு

அண்மைய செய்திகள்