பேனா பக்கிரி (வந்துட்டான்யா !வந்துட்டான்யா !)

ஒரு துளி மையில்,
ஓராயிரம் சிந்தனைகள்
புரட்டிபோடும் உலகை !
(ஒரு வரியில எழுதறத ஒன் பய் ஒன்னா எழுதிட்டு
கவிதையாம் , நம்பிட்டோம் )
-------------------------------------------------------------------------------------------------------------
என்னவளே ! உனக்குதான் எத்துனை பெரிய மனது,
நான் கிறுக்கி எழுதுவதை, நீ மட்டும்தான் கவிதை என்கிறாய் !
( நீ உண்மையிலே கிருக்கன்கிறது ,கொஞ்சம் நாள்ல தெரியும்டி )
-------------------------------------------------------------------------------------------------------------
என் பேனாவுக்கு எழுத மட்டும்தான் தெரியும் என நினைத்தேன் !
அட ! ஓவியமும் வரைகிறதே, உன்னை கண்டதால் !
( நாயே , அது மேஜிக் பேனாவா இருக்கும் , பன்னாடைக்கு லொள்ள பாரு )

மூடி விலகினால்தான் பேனாவுக்கு வேலை !
உன் நாணம் விலகினால்தான் ...........................
(வெட்கமா இருக்காம்.. , நம்மள FILLUP பண்ண சொல்றாரு !)
-------------------------------------------------------------------------------------------------------------
என் பேனா எழுதிக்கொண்டே இருந்தது !
                  பூக்களை கண்டதும்,
                  பறவைகளை கண்டதும்,
                  நிலவை கண்டதும்,
                  கடலை கண்டதும்,
மௌநமானதேன் , உன்னை கண்டதும் ?
(நாதாரி, முதல்ல பேனாவுக்கு மைய ஊத்து)
-------------------------------------------------------------------------------------------------------------
வந்தால் என் அத்தை மகள் புதுபட்டி பொன்னுதாயி
8 நாள் திருவிழாவிற்கு , சென்னையிலிருந்து
ஆசை ஆசையாய் பேசினோம் ,
விளையாடினோம் ,சண்டயிட்டோம் பிறகு கூடினோம்
அப்பொழுது தெரியவில்லை எங்கள் இருவருக்குமான நெருக்கம்
8 ஆம் நாள், பஸ்ஸில் ஏறி , 
SLOWMOTION ல்........... ,   She simply said ,
             " Bye, Bye"
மூடி தொலைத்த பேனா போல ,
பாழாகி போனது என் மனம் !
(இதுலயும் பேனாவா சொருகிடானையா  ! கடைசில இவனுக்கும் 'சென்னை போடா வெண்ணை' ஆயிற்றே !)
-------------------------------------------------------------------------------------------------------------
எதையோ ஆவலாய் எழுதினேன் ,
நீ வந்தாய் , முகில் போல !
பேனா கிறுக்க ஆரம்பித்தது
மனம் ரசிக்க ஆரம்பித்தது
திடிரென அங்கு நின்ற முகிலோடு சென்றாய் .. கை கோர்த்து !
அய்யகோ !
கிறுக்கிய பேனாவால்
குத்தி கிழிபட்டது பேப்பர் மட்டுமல்ல
என் குட்டி நெஞ்சும்தான் !
(முகில் போலனு சொல்லும்போதே மைல்டா ஒரு Doubt
வந்துச்சேடா ! )
-------------------------------------------------------------------------------------------------------------

உக்காந்து யோசிபாயிங்கலோ !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அண்மைய செய்திகள்