கல்லூரி நாட்கள்..

இலைகளாய் நுழைந்தோம்!!
மரங்களாய் நிற்கின்றோம்!!
வேர்களாய் நம் நட்பு!!

நாட்காட்டியில் தேடி கொண்டிருக்கிறேன்
நாம் சிரிக்க மறந்த நாட்களை,
அட என்ன விந்தை
நான்கு ஆண்டுகளாய் அதற்கு விடுமுறை!!
கல்லூரி அத்தியாயத்தில்
முற்று புள்ளி வைக்கும் அந்த
கடைசி தினத்தில்
கண்ணீரை கொண்டு அதை
தொடர் கதை ஆக்க முயன்று தோற்றுப் போனேன்..
அவர்கள் தந்த பாடம் எல்லாம் படித்தே முடித்தோம்
மதிப்பெண் பெற்றோம்!!
இலவச இணைப்பாய் மனித மனங்களையும் படித்தோம்
நண்பர்கள் பெற்றோம்!!
சில மனங்களை படிக்க முயன்று தோற்றோம்!!
இன்றோ அத்தோல்விகளை நினைத்து சிரிக்கும் தருணம்!!


அந்த நாட்களில்
படித்து
படித்து
களைத்த கண்களுக்கு
அப்பகுவமற்ற காதலால் கிடைத்த
அவள் முகமும்
அவள் மறந்து விட்டு போன கைக்குட்டையுமே ஆறுதல்!!
அந்த நாட்களில்
எல்லாமே என்னிடம் என்னும் ஓர் எண்ணம் ..
கல்லூரி முடித்து திரும்பி பார்த்தேன்,
ஆள் இல்லா வீதியில் நான் மட்டுமே என்னும் ஓர் எண்ணம் ..
தேனீக்களுக்கு சவால் விடும்
பருவம் அது!!
என்ன .. தேன் உரிஞ்ச மட்டும்
பக்கத்து வகுப்பறைக்கு செல்வோம்!!
கவிதை எழுதப்பட்ட
மேசைகளுக்கும்..
நய்யான்டி கதைகள் எழுதப்பட்ட
சுவர்களுக்கும்..
வண்ணம் தீட்டி மறைத்து விட முடியும்..
இதயத்தில் எழுதப்பட்ட எழுத்துகளை மறைக்க ஏது வண்ணம்??


--
--------------
Regards,

David joseph Raj K
Chhattisgarh.
"Small things make perfection,But
Perfection is not a small things......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அண்மைய செய்திகள்