ஏங்குகிறது மனம் !

மின்வெட்டு ...
தடைபட்டு போன மின்சாரத்தை
திட்டுவதில் செலவானது
சில நொடிகள் !

பெரிய மகள்
பள்ளி சம்பவங்களை
சுவாரஸ்யமாய்
சொல்ல தொடங்கினாள் !

என்னவரின்
அலுவலக அலசல்கள்
அழகாய் அணிவகுத்தன
அடுத்த சில வினாடிகள் !

சிறிய மகன்
இருண்ட வானில் மின்னிய
நிலவையும் நட்சத்திரங்களையும்
துணைக்கு அழைக்கிறான்
ஆங்கிலப் பாடல்களில் !

தென்றல் காற்று ...
பால்கனி நிலா ...
இனிமையானது அந்த
இரவு நேரம் ..
தடைபட்ட மின்சாரம் வரும்வரை !

இன்று !
நவீன கண்டுபிடிப்பால்
விஞ்ஞான வளர்ச்சியால்
செயற்கை மின் இணைப்பு
கொண்டுள்ளது - என் வீடு

வெளியே...
மின்வெட்டால் இருள் பரவ,
என் வீடு மட்டும்
மிளிர்கிறது வெளிச்சத்தில் ...
என் மனமோ,
மின்வெட்டு இருளுக்கு
ஏங்குகிறது !
     
 - சு . ஹேமலதா , பொள்ளாச்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அண்மைய செய்திகள்