தேடி தான் பிடிப்போமே

நடந்து செல்லும்
பள்ளி சிறுவனை
என் பைக் யில் விட்ட போது
"ரொம்ப நன்றி அண்ணே !!!"
என்று கேட்ட போது
மனம் கனத்துப் போனது ......
வழக்கமாக செல்லும்
பேருந்தில் ''பர்ஸ் "ஐ
மறந்து விட்ட நாளில்
"இருக்கட்டும் சார்..,
நாளைக்கு தாங்க சார் "
என்று கேட்ட போது
மனம் கனத்துப் போனது ......

அம்மா வயதிருக்கும்
முதியோருக்கு ஒரு
வேளை உணவு வாங்கி
கொடுத்த போது ...
"தம்பி..,நீங்க குழந்தை
குட்டிகளோட ..நல்லா
இருக்கனும் "
என்று கேட்ட போது
மனம் கனத்துப் போனது ......

கல்யாண பந்திகளில் 
சொந்தகளின்
சச்சரவுகளுக்குகிடையில்
நண்பர்கள் ..
"டேய்!!.,
நாங்க இலையை
எடுக்கோம் டா .."
என்று கேட்ட போது
மனம் கனத்துப் போனது ......

சொல்லிக் கொடுத்த
மாணவன் ..,காரில்
வந்து இறங்கி
"சார் ..,நான்
இன்னைக்கு இப்படி
இருக்கேன்னா?..
அதுக்கு நீங்க தான்
காரணம் "
என்று கேட்ட போது
மனம் கனத்துப் போனது ......


இப்படி தினசரி
வாழ்க்கை நிமிடங்களில்
உண்மை மனிதர்கள்
மறைந்து தான்
கிடக்கிறார்கள்...
தேடி தான்  பிடிப்போமே.

சு .அப்துல் ஹக்கீம் .,திருநெல்வேலி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அண்மைய செய்திகள்